
நடிகை ரித்திகாசிங் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் படம் “இன் கார்”. டைரக்டர் ஹர்ஷ் வர்தன் இப்படத்தை இயக்கி உள்ளார். இந்தியில் உருவாகி இருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. வருகிற மார்ச் 3ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் திரையுலகினர், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இதில் ரித்திகாசிங் பங்கேற்று கூறியதாவது “இத்திரைப்படம் தனக்கு பெரும் சவாலாக இருந்தது. ஒரு கடத்தலுக்கு உள்ளாகும் பெண் எத்தனை மனச் சிதைவுக்கு உள்ளாகிறாள், அவள் துன்பத்தின் எந்த எல்லை வரை செல்லுகிறாள் என்பதை நுணுக்கமாக இப்படம் சொல்லும். இப்படத்தில் நடித்த பின் தன்னால் அந்த கதாபாத்திரத்திலிருந்து வெளியில் வர இயலவில்லை” என்று கூறினார்.