திமுகவை கண்டித்து நடந்த பொதுக் கூட்டத்தில் வைத்திலிங்கம் பேசியிருப்பதாவது “DMK ஆட்சி சுயநலக்காரான எடப்பாடி பழனிசாமியால் தான் ஆட்சிக்கு வந்தது. நாங்கள் சொல்லுவதை அவர் கேட்டிருந்ததால் அதிமுக தமிழகத்தை ஆண்டுக் கொண்டு இருக்கும். திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இதனிடையே எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை சின்னம் இல்லை எனில், ஒரு தொகுதியில் கூட ஆயிரம் வாக்குகள் அவரால் வாங்க இயலாது. அதே நேரம் நாங்கள் கத்திரிக்கோல் சின்னத்தில் தேர்தலில் நிற்க தயார். எடப்பாடி பிளேடு சின்னத்தில் நிற்க ரெடியா?. அப்படி நின்று எங்களை விடவும் ஒரு வாக்கு அதிகம் வாங்கி விட்டால் அதிமுகவை விட்டு விலகி விடுகிறோம்” என்று அவர் பேசினார்.