
சூர்யா கடைசியாக சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். கடைசி இரண்டு வருடங்களாக சூர்யா நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகாததால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அடுத்ததாக கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் 44வது படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் மறைந்த நடிகர் மாரிமுத்து அளித்த பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் நேருக்கு நேர்படத்தில் வசந்திடம் உதவி இயக்குனராக இருந்தேன். அந்த படத்தில் சூர்யா நடிப்பதற்கு தடுமாறினார். சிம்ரனை கட்டிப்பிடிக்க சொன்னார் வசந்த். ஆனால் சூர்யாவால் அது முடியவே இல்லை. தயங்கி தயங்கி நடித்த ஒரு கட்டத்தில் நடிப்பு என்பதை புரிந்து கொண்டு நடிக்க தொடங்கினார் என்று கூறியுள்ளார்.