நடிகர் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாக உருவான “மகாராஜா” அண்மையில் திரையரங்குகளில் வெளியானது. நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் வசூலை வாரி குவித்து வருகிறது. இன்று மகாராஜா படத்தின் குழுவினர், நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.

அதில் பேசிய தமிழ் சினிமா பத்திரிக்கையாளர் சங்க செயலாளர் ஆர்.எஸ்.கார்த்திக், “கொரோனா காலத்தில் நடிகர்கள் அஜித்குமார் மற்றும் விஜய சேதுபதி தான் எங்களுக்கு அதிகமாக உதவி செய்தனர்” என கூறியுள்ளார்.