ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் தனபால். 45 வயதான இவர் ஆயுள் தண்டனை கைதி ஆவார். இந்த நிலையில் தன்னுடைய வயதான தந்தையை பார்ப்பதற்காக மூன்று நாட்கள் பரோலில் வந்த இவர் பத்தாவது முறையாக ரத்ததானம் செய்த நிகழ்வு அந்த பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர் ஏற்கனவே ஒன்பது முறை ரத்த தானம் செய்துள்ளார். சென்னை புழல் சிறையில் ஆயுள் கைதியாக உள்ள இவர் ரத்ததானம் வழங்கியதோடு சிறையில் தூய்மை பணி செய்வதற்காக பெற்ற இரண்டு மாத சம்பள தொகையை அதாவது 5600-யை முதியோர் காப்பகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.