மும்பையில் வசிக்கும் 35 வயது திருமணமான பெண் ஒருவர் தன்னுடைய கணவர் அவருடைய நண்பர்களின் முன்பாக தன்னுடைய ஆடைகளை அவிழ்க்க கட்டாயப்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். அதாவது தன்னுடைய கணவர் அடிக்கடி நண்பர்கள் வீட்டிற்கு அழைத்து வந்து truth and dare  விளையாடி தன்னுடைய மனைவியை அவர்களின் முன்பாக ஆடைகளை அவிழ்க்கும் படி நிர்பந்தம் செய்து வந்துள்ளார்.

மனைவி அதற்கு மறுத்ததால் அவரை பல்வேறு சமயங்களில் அடித்து துன்புறுத்தி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்துள்ளது. தன்னுடைய கணவர் தங்களுடைய ஐந்து வருட திருமண வாழ்க்கையில் பலமுறை இதுபோன்று நண்பர்கள் முன்னிலையில் தனியாக இருக்கும்போதும் அடித்து துன்புறுத்தினார் என்று போலீசில் புகார் அளித்துள்ளார் அந்த பெண். இதனை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.