
மதுரை மாவட்டத்திலுள்ள பெத்தானியாபுரம் பகுதியில் நந்தினி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்கிறார். நந்தினி பெற்றோர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர். அவர் மதுரை மாநகராட்சி மண்டலம் இரண்டில் வரி வசூல் மையத்தில் பணிபுரிந்து வருகிறார் இந்த நிலையில் நந்தினி பாலரங்காபுரம் பகுதியில் இருக்கும் இயேசுவின் நற்செய்தி சபை கூட்டத்திற்கு சென்ற வந்துள்ளார்.
அப்போது பாதிரியார் ஜான் ராபர்ட் என்பவரின் மகன் பாஸ்டர் டோனி ராய்ஸ் என்பவருடன் குடும்ப ரீதியாக நந்தினிக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனால் நந்தினியிடம் திருமணம் ஆனதை மறைத்து ஆசை வார்த்தைகள் கூறி நெருக்கமாக பழகியுள்ளார். இருவரும் நான்கு ஆண்டுகளாக கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளனர். ஒரு கட்டத்தில் நந்தினி தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார்.
கடந்த ஒன்றாம் தேதி டோனி ராய்ஸ் வீட்டிற்கு சென்றபோது அவரது பெற்றோர் தங்களது மகனை தேடி வரக்கூடாது, அவர் வேலை பார்க்கும் சர்ச்சுக்கு போகக்கூடாது என நந்தினியை மிரட்டி உள்ளனர். அவர் நந்தினியிடமிருந்து 2 லட்ச ரூபாய் வரை பணத்தை வாங்கி செலவு செய்துள்ளார். இந்த நிலையில் நந்தினி மாநகர துணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று தன்னை ஏமாற்றிய டோனி ராய்ஸ் மற்றும் அவரது பெற்றோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளார்.