
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு வாய்க்கால் மேடு செங்குந்தபுரம் பகுதியில் கோபால்(40)- மணிமேகலா(28) தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் கோபால் வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். மணிமேகலை ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்த தம்பதியினருக்கு கோகுல்(10), தமிழினி(7) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். மணிமேகலா கல்யாண விழாக்களுக்கு சென்று கேட்டரிங் வேலை செய்து வந்ததாகவும் தெரிகிறது.
இது கோபாலுக்கு பிடிக்கவில்லை. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மணிமேகலை தனது கணவரை பிரிந்து தனியாக வாடகைக்கு வீடு எடுத்து குழந்தைகளுடன் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் கோபால் மணிமேகலை வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.
அதற்கு மணிமேகலை மறுப்பு தெரிவித்ததால் கோபத்தில் கோபால் கத்தியால் தனது மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் அலறி துடித்த படுகாயமடைந்த மணிமேகலையை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிமேகலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கோபாலை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.