மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, தற்போது முழுமையாக அதிலிருந்து குணமடைந்துவிட்டதாக கூறியுள்ளார்.

“சரியான நேரத்தில் தூங்குதல், உணவு முறையில் கட்டுப்பாடு மற்றும் உடல்நல பராமரிப்பு என அனைத்தையும் பின்பற்றியதன் பலனாகவே, நான் இன்று எந்த ஒரு மருந்துமின்றி சர்க்கரை நோயிலிருந்து மீண்டுள்ளேன்,” என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.

அமைச்சர் அமித்ஷா தனது அனுபவத்தை பகிர்ந்த போது, “தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்தேன். அதேபோல், குறைந்தபட்சம் 6  மணி நேரம் நல்ல தூக்கம் மிக அவசியம். இது உடல் நலத்திற்கு மட்டுமல்ல, மன அமைதிக்கும் அவசியமானது.

இந்த இரண்டு பழக்கங்களே எனது நீண்டநாள் சர்க்கரை பிரச்சனைக்கு தீர்வாக இருந்தது” என கூறியுள்ளார். மேலும், தூய நீர் மற்றும் சத்தான உணவின் முக்கியத்துவத்துவம் பற்றியும் பேசியுள்ளார்.

இளைஞர்கள் அனைவரும் இந்த ஒழுங்குமுறை வாழ்க்கையை பின்பற்ற வேண்டும் என்றும் அமித்ஷா கேட்டுக்கொண்டார். “நான் ஒரு அரசியல்வாதியாகவும், பிஸியான மனிதராக இருந்தாலும் இந்த ஒழுங்குகளை தவறாமல் கடைபிடித்தேன்.

உடலுக்கும், மூளைக்கும் இது மிகச்சிறந்த பயிற்சி. எனது அனுபவம் இது – அதை பிறரும் கடைபிடித்து நலம் பெற வேண்டும்,” என அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அவரது இந்த உண்மை கருத்துகள் இப்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.