
Youtube இல் அனுமதி இல்லாமல் காதல் தொடர்பான பேட்டியை ஒளிபரப்பியதால் இளம் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனுமதி இல்லாமல் பேட்டியை ஒளிபரப்பியதால் இளம் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்ததால் தனியார் யூடியூப் சேனல் உரிமையாளர் மற்றும் பேட்டி எடுத்த பெண் உட்பட 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
பேட்டியை அனுமதிஇன்றி ஒளிபரப்ப மாட்டோம் என்று கூறிவிட்டு சட்டவிரோதமாக இளம் பெண்ணின் பேட்டியை சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் அந்த பெண் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.