
தமிழில் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவரி, நான் ஈ, கத்தி, தங்கமகன், தெறி, 24 உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் சமந்தா. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாகவும் வலம் வரும் சமந்தா நடிப்பில் அண்மையில் சாகுந்தலம் படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இவர் இப்போது விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதோடு சமந்தா நடித்த சிட்டாடல் வெப் தொடர் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சமந்தாவின் பிறந்தநாளான நேற்று அவருக்கு வாழ்த்து கூறி நடிகர் ராம் சரண் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, அன்பான சமந்தா உங்களையும் உங்களுடைய பணியையும் நினைத்தால் பெருமையாக உள்ளது. நீங்கள் நல்ல உடல் ஆரோகியத்துடன் இருக்கவும். பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
Dearest @Samanthaprabhu2! Extremely proud of you and your amazing work. Wishing you great health and success. Happy Birthday and good luck with #Citadel
— Ram Charan (@AlwaysRamCharan) April 28, 2023