தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை பாராட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், கல்வியில் ஏற்றத்தாழ்வு மிகுந்த சம காலத்தில் ஏழை மற்றும் பணக்காரர் என்ற எந்தவித பாகுபாடும் இல்லாமல் தமிழகம் முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ மாணவிகளை வரவழைத்து பாராட்டு சான்றிதழ் உடன் உயர்கல்விக்கான ஊக்கத்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னத பணியை செய்யும் என்னுயிர் இளவல் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் என் அன்பு தளபதி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு திருவான்மியூரில் இன்று பாராட்ட சான்றிதழ் மற்றும் உதவி தொகையை நடிகர் விஜய் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.