நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலமாக பெரியார் பற்றி விமர்சனம் செய்து வருகிறார். அவர் பெரியார் பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்வது சர்ச்சையாக மாறிய நிலையில் அவர் மீது பல காவல் நிலையங்களில் வழக்குகள் கூட தொடரப்பட்டுள்ளது. இருப்பினும் பெரியாரைப் பற்றி பேசுவதை நான் நிறுத்த மாட்டேன் எனவும் பெரியாரை ஏற்கும் என்னுடைய தம்பிகள் தாராளமாக என்னை விட்டு போகலாம் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் பிரபாகரன் பெரியாரை ஏற்றார் என்ற ஒரு கருத்து பரவுவதாக நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது, எங்க அண்ணன் எப்போது  பெரியாரை ஏற்றார். நான் அப்போது நாட்டில் தான் இருந்தேன். அவருடைய வீட்டில் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் புகைப்படங்கள் தான் இருந்தது. அவர் எப்போதுமே பெரியாரை நான் ஏற்றேன் என்று கூறியதே கிடையாது என்றார்.

இந்நிலையில் இதற்கு முன்னதாக ஒரு பொது மேடை நிகழ்ச்சியில் சீமான் பேசும்போது பிரபாகரனே பெரியாரை புகழ்ந்து பேசியதாக கூறியுள்ளார். அது தொடர்பான வீடியோவையும் இந்த வீடியோவையும் இணைத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கி வருகிறார்கள். அதாவது இது பற்றி சீமான் கூறியதாவது, பெரியார் ஒரு கருத்தியல் புரட்சியாளர் பெரியார் ஒரு கருத்து பெட்டகம் என்றார் பிரபாகரன். இதைத்தான் என்னுடைய அண்ணன் என்னிடம் சொன்னார். பெரியாரின் சிந்தனைகளை படித்து வளர்ந்த பிள்ளைகள். பேரறிஞர் அண்ணா என்ற பெருமகனின் பேச்சைக் கேட்டு எழுத்தை படித்து வளர்ந்த பிள்ளைகள். இதனால்தான் இந்த தேசத்தில் வளர்ந்த நாங்கள் போராளிகளாக மாறிவிட்டோம். பெரியார் என்ற பெருமகனின் நிழலில் நாங்கள் வளர்ந்தவர்கள். பேரறிஞர் அண்ணாவின் தம்பிகள் மற்றும் தளபதிகள் நாங்கள் என்று கூறினார். மேலும் பிரபாகரன் பெரியாரை புகழ்ந்து பேசியதாக சீமான் பேசிய வீடியோ இதோ,

 

 

View this post on Instagram

 

A post shared by Dravidian Model (@dmk_dravidianmodel)