
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் சமீபத்தில் கோலிக்கு ஆதரவளித்தற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், அவரது கேரியரில் ஒரு கட்டத்தில் கடினமான காலங்களை சந்திக்க நேரிடும். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் இந்த கட்டத்தை கடந்துதான் பல சாதனைகளை படைத்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ரன் மெஷினுமான விராட் கோலியும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஃபார்ம் இல்லாததால் சிரமப்பட்டார். அப்போது பல கிரிக்கெட் வீரர்கள் கோலிக்கு ஆதரவு தெரிவித்தனர். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசமும் விராட்டுக்கு ஆதரவாக நின்று, ‘ இதுவும் கடந்து போகும், வலுவாக இருங்கள் விராட் கோலி ‘ என்று சமூக வலைதளங்களில் இருவரும் ஒன்றாக இருக்கும் படத்தை வெளியிட்டார்.
அந்த பதிவை பார்த்த விராட் உடனடியாக பதிலளித்து, ‘நன்றி.. தொடர்ந்து விளையாடுங்கள். ஆல் தி பெஸ்ட்’ என்று ட்வீட் செய்துள்ளார். பின்னர் இந்த ட்வீட்கள் வைரலானது. இந்நிலையில் பாபர் ஆசம் சமீபத்தில் விராட் கோலிக்கு ஆதரவளித்ததற்கான காரணத்தை வெளிப்படுத்தினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, எந்தவொரு விளையாட்டு வீரரும் தனது வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு கட்டத்தை கடந்து செல்கிறார். அந்த நேரத்தில் நான் ட்வீட் செய்தால் அது கோலிக்கு கொஞ்சம் நம்பிக்கையைத் தரும் என்று நினைக்கிறேன். ஒரு வீரர் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது, மற்ற வீரர்கள் அவருக்கு ஆதரவாக நிற்க முயற்சி செய்கிறார்கள் கடினமான நேரங்கள் மற்றவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. அதனால்தான் கோலி விஷயத்தில் அப்படி நடந்து கொண்டேன். இது அவர்களுக்கு சாதகமான விளைவை ஏற்படுத்தக்கூடும்,” என்று கூறினார்.
Thank you. Keep shining and rising. Wish you all the best 👏
— Virat Kohli (@imVkohli) July 16, 2022