
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். இவருடைய நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்ததாக குட் பேட் அக்லி படம் ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது.
நடிகர் அஜித் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல், கார் ரேசிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது படங்களில் நடிப்பதிலிருந்து பிரேக் எடுத்துக்கொண்டு கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அதற்காக துபாய் சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில் பார்சிலோனாவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் மணிக்கு 270 கிலோமீட்டர் வேகத்தில் காரை இயக்கி 1.47 நிமிடங்களில் இலக்கை எட்டி தன்னுடைய சொந்த சாதனையை முறியடித்துள்ளார் அஜித். இதற்கு முன்பாக 240 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்கி1.57 நிமிடங்களில் இலக்கை எட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.