
தெலுங்கு திரை உலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. இவர் பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் போன்ற திரைப்படங்களின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். குறிப்பாக ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு சர்வதேச அளவிலான கோல்டன் குளோப் விருது கிடைத்ததோடு ஆஸ்கர் விருதுக்கான பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இயக்குனர் ராஜமவுலி தி நியூயார்க்கர் என்ற பத்திரிக்கைக்கு நீண்ட பேட்டி கொடுத்துள்ளார்.
இந்த பேட்டியின் போது இயக்குனர் ராஜமவுலியிடம் நீங்கள் பரிந்துரைக்கும் 5 சிறந்த இந்திய திரைப்படங்கள் எவை என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ராஜமவுலி ஆடுகளம், பண்டிட் குயின், சங்கராபரணம், முன்னாபாய் எம்பிபிஎஸ், பிளாக் ஃப்ரைடே போன்ற படங்களின் பெயர்களை கூறினார். மேலும் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படம் 6 தேசிய விருதுகளை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Rajamouli picks five Indian films for New Yorker readers.
Lovely interview, loaded with political questions. By @simonsaybrams pic.twitter.com/JkqIhl6t2B
— Rajaneesh (@vilakudy) February 17, 2023