இந்தியாவின் பிரபலமான நடிகர் மற்றும் நடிகைகள் பட்டியலை ORMAX INDIA நிறுவனம் மாதந்தோறும் வெளியீட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது செப்டம்பர் மாதத்திற்கான இந்தியாவின் சிறந்த நடிகர்கள் பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மீண்டும் தளபதி விஜய் முதலிடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக வெளியான பட்டியல்களிலும் இந்தியாவின் பிரபலமான நடிகர்களில் விஜய் தான் முதலிடத்தில் இருந்தார். இதைத்தொடர்ந்து கடந்த மாதமும் விஜய் முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.

இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் நடிகர் பிரபாஸ், மூன்றாம் இடத்தில் நடிகர் ஷாருக்கான், நான்காம் இடத்தில் நடிகர் அஜித், ஐந்தாம் இடத்தில் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் உள்ளனர். அதன் பிறகு ஆறாம் இடத்தில் நடிகர் அல்லு அர்ஜுனும், ஏழாமிடத்தில் நடிகர் மகேஷ் பாபுவும், எட்டாம் இடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும்,‌ ஒன்பதாம் இடத்தில் நடிகர் ராம் சரணும், பத்தாம் இடத்தில் நடிகர் சல்மான் காணும் இருக்கிறார்கள். மேலும் இந்திய சினிமாவின் பிரபலமான நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய் முதலிடத்தை பிடித்துள்ளது அவருடைய ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.