
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். கடந்த 22 ஆம் தேதி 18-வது ஐபிஎல் சீசன் தொடங்கிய நிலையில் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இதில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்த நிலையில் இன்று மதியம் ஹைதராபாத்தில் இரண்டாவது லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 106 ன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதைத்தொடர்ந்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ராஜஸ்தான் அணியில் துரூவ் ஜூரேல் 70 ரன்கள் வரை எடுத்திருந்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தற்போது ஹைதராபாத் அணி ஒரு உலக சாதனையை படைத்துள்ளது. அதாவது உலக அளவில் சர்வதேச மற்றும் உள்ளூர் டி20 போட்டிகளை சேர்த்து ஒரே இன்னிங்ஸில் அதிக முறை 250 ரன்கள் எடுத்த அணி என்ற உலக சாதனையை படைத்துள்ளது. அதன்படி மொத்தமாக ஒரே இன்னிங்ஸில் 4 முறை ஹைதராபாத் அணி 250 ரன்கள் எடுத்துள்ளது. மேலும் இந்த பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.