தமிழ் திரையுலகில் ரசிகர்களால் தளபதி என்று அழைக்கப்படும் விஜயின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தத் திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இது விஜயின் 68 ஆவது படமாகும். இந்த திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா,லைலா போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார். அதோடு விஜய் கையில் துப்பாக்கியுடன் அமர்ந்திருக்கும் புதிய போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார். மேலும் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 5 ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. மேலும் சமீபத்தில் கோட்படத்தில் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.