தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வரும் தல அஜித் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் 11-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்து வருகிறது. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

கடந்த 8-ம் தேதி துணிவு திரைப்படம் netflix ஓடிடி தளத்தில் வெளியான நிலையிலும் துணிவு படத்தை தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் 50-வது நாளை தல ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். அதன்படி திரையரங்கில் சில்லா சில்லா பாடலுக்கு தல ரசிகர்கள் நடனமாடி கொண்டாடிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் அஜித் அடுத்ததாக நடிக்கும் ஏகே 62 படத்தின் அறிவிப்பு அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.