பாம்புகளின் மீது அதீத அன்பு கொண்ட வனவிலங்கு ஆர்வலரான ஜே ப்ரீவர் தனது மகளுடன் இருக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அந்த காணொளியில் ஜே ப்ரீவர் மிகப்பெரிய மலைப் பாம்பை தோளில் சுமந்தபடி நடந்து செல்கிறார்.

அவர் மலைப்பாம்புடன் செல்வது சகஜம் என்றாலும் அவருடன் அவரது மகள் ஜூலியட்டும் மிகப்பெரிய மலைப் பாம்பை சுமந்து கொண்டு செல்கிறார். இந்த காணொளியை ஜூலியட் தான் தனது instagram பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். சகஜமாக இரண்டு மலைப்பாம்புகளை தோளில் போட்டு செல்லும் இந்த காணொளி நெட்டிசன்களிடையே வைரல் ஆகி வருகிறது.