
பீகார் மாநிலம் வைஷாலி பகுதியை சேர்ந்தவர் கௌதம். இவர் டெல்லியில் உள்ள பல்கலைகழகம் ஒன்றில் எம்பிஏ படித்துக்கொண்டிருந்தார். விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த இவர் சம்பவத்தன்று தனது குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் வாட்ஸ் அப் குழுவில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார்.
இதை பார்த்த உறவினர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சடைந்துள்ளனர். அவர் அந்த குறுஞ்செய்தியில் “அப்பா அம்மா என்னை மன்னித்து விடுங்கள். நான் அப்பாவி, என் மீது குற்றம் சுமத்துகிறார்கள். விடுதிக்காப்பாளர் என்னை துன்புறுத்துகிறார். நான் தற்கொலை செய்து கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கௌதமை தொலைபேசியில் அழைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அவரது தொலைபேசி அழைப்பு ஏற்கப்படவில்லை. இதனால் கௌதமின் பெற்றோர் நொய்டாவில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுத்து உதவி கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கௌதமின் உறவினர்கள் விடுதிக்கு சென்று பார்த்த போது அங்கு அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.
கௌதமின் பெற்றோர் பல்கலைக்கழகம் தான் தனது மகனின் இறப்பிற்கு காரணம் என்றும் தங்கள் மகன் தவறு செய்திருந்தால் பெற்றோரான எங்களுக்கு தகவல் கொடுத்திருக்க வேண்டும். அதை செய்யாமல் விடுதி காப்பாளர் எவ்வாறு துன்புறுத்தலாம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.