
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் அவர்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா இழிவுபடுத்தும் விதத்தில் பேசியதாக கூறி பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆம்பூர் ரயில் நிலையத்தில் விசிகவினர் அமைச்சரவையில் இருந்து அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது ரயில் தண்டவாளத்தில் படுத்து தகராறு செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.