
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்த அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் அதிபர் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்தி 7 கோடி பேர் இதுவரை வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மொத்தம் 18.65 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 538 பிரதிநிதிகளில் 270 பிரதிநிதிகளை பெரும் வேட்பாளர் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.