
அமெரிக்க நாட்டில் வருகின்ற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அந்த தேர்தலில் நடுநிலை வகிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் மறைமுகமாக முன்னாள் அதிபர் ரெனால்ட் ட்ரம்புக்கு உதவி புரிவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கிறது.
இதற்கிடையில் டிரம்ப் மீது சமீபத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்ற நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பிறகு நலமுடன் வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் தேர்தல் செலவுகளுக்காக ட்ரம்புக்கு ஒரு நிறுவனம் நிதி திரட்டி வரும் நிலையில் அந்த நிறுவனத்திற்கு எலான் மஸ்க் தேர்தல் முடிவடையும் வரை மாதம் தோறும் நிதி வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதன்படி மாதந்தோறும் அவர் இந்திய மதிப்பில் ரூ.148 கோடி வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.