
பிரேசிலில் அடர்ந்த அமேசான் காடுகளில் மருபோஸ் பழங்குடியினர் நூற்றுக்கணக்கான வருடங்களாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு இணைய வசதி இல்லாத நிலையில் தற்போது இங்கு இணைய உலகின் ஜாம்பவான் ஆன எலான் மஸ்கின் புண்ணியத்தால் இணைய சேவைகள் அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு கிடைத்துள்ளது.
இந்த இணைய சேவையின் வருகையால் அவசர காலத்தில் மருத்துவ சேவைகள் அவர்களை சென்றடைகின்றன. ஆனால் அது மட்டுமல்லாமல் அங்குள்ள பழங்குடியின இளைஞர்கள் ஆபாச வீடியோக்கள் அடிமையாகி உள்ளார்கள். ஆபாச வீடியோக்களை அவர்கள் இஷ்டம்போல் ஷேர் செய்து இணைவசதியை எப்படி பயன்படுத்துவது என்ற தெளிவே இல்லாமல் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.