
அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் போன்ற இரண்டும் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களாக இருந்து வருகிறது. பெரும்பாலும் புதியதாக வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் போன்றவை இந்த 2 தளங்களில் ஏதேனும் ஒன்றில் வெளிவரும் நிலை தான் தற்போதைக்கு இந்தியாவில் இருந்து வருகிறது. அதேநேரம் நீங்கள் இலவசமாக இந்த ஓடிடி தளங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
அதாவது, ஜியோ மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்களாக இருக்கக்கூடிய நபர்கள் போஸ்ட்பெய்டு திட்டத்தில் இணையும் பட்சத்தில் அவர்களுக்கு அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் தளங்களை இலவசமாக காண முடியும். அதே நேரம் ப்ரீபெயிட் திட்டத்தில் உள்ளவர்கள் 2 ஒடிடி தளங்களையும் ஒரே நேரத்தில் இலவசமாக பயன்படுத்த முடியாது. இதற்கு ஒரே வழி அவர்களும் போஸ்ட்பெயிட் திட்டத்துக்கு தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
ஜியோவை பொறுத்தவரை ரூ.699 போஸ்ட்பெயிட் திட்டத்தில் இணையும் பட்சத்தில் அவர்களுக்கு ஜியோ சினிமா, ஜியோ டிவி போன்றவற்றுடன் நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் ஆகியவற்றை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். தற்போதைய நிலையில் அமேசான் ஒரு மாதத்துக்கான இலவச ட்ரையல் சப்ஸ்கிரிப்ஷனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதனை பெறுவதற்கு அதன் அதிகாரப்பூர்வமான வலைதளத்திற்கு சென்று அமேசான் பிரைம் வீடியோவை ஆக்சஸ் செய்து ஒரு மாதத்திற்கான இலவச ட்ரையல் திட்டத்தில் இணைந்துகொள்ளலாம். எனினும் தற்போது வரை அமேசானில் கணக்கு வைத்திருக்காமல் புதியதாக இணைபவர்களுக்கு மட்டும் இச்சலுகை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.