
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “நான் கட்சியின் அடிப்படை தொண்டர்களில் ஒருவன்.
முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வதை தான் நாங்கள் செயல்படுத்துவோம். துணை முதல்-அமைச்சர் பதவி உள்ளிட்ட பெரிய விஷயங்கள் பற்றியெல்லாம் முதலஅமைச்சர் தான் முடிவு செய்வார் என்று தெரிவித்துள்ளார்.