தலைவர் அண்ணாமலையின் இளைஞர் படை மக்களுக்கு சேவையாற்ற எப்போதும் தயாராக உள்ளது என்று பாஜக இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா தெரிவித்துள்ளார்..

தமிழக பாஜக இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா தனது எக்ஸ் பக்கத்தில், வட சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவொற்றியூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி சார்பில் குடிநீர் மற்றும் பிரட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. அந்தப் பகுதியில் சாக்கடை மழைநீரில் கலந்து மிகவும் மோசமான நிலை ஏற்பட்டது பாஜகவின் இளைஞரணி நிர்வாகிகள் அப்பகுதியை சுத்தம் செய்து அப் பகுதி மக்களுக்கு உறுதுணையாக நின்றோம் ஆனால் அந்த பகுதியில் சட்டமன்ற உறுப்பினரோ கவுன்சிலரோ யாருமே எட்டிப் பார்க்காத நிலையில் பொதுமக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

ஆளும் அரசின் அமைச்சர் பி மூர்த்தி போட்டோ சூட் பணிகளில் மட்டுமே ஈடுபட்டு மக்களுக்கு எந்த ஒரு நிவாரண உதவியும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினர். இந்த பொதுப்பணியில் என்னுடன் இளைஞர் அணியின் மாவட்ட தலைவர் மூர்த்தி இளைஞர் அணியின் மாநிலச் செயலாளர் நரேந்திர வேலு, இளைஞர் அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் கோபிநாத் மற்றும் சென்னை கோட்டம் இளைஞர் அணியின் மாவட்ட தலைவர்கள் ஆகியோர் பணியாற்றினர். தலைவர் அண்ணாமலையின் இளைஞர் படை மக்களுக்கு சேவையாற்ற எப்போதும் தயாராக உள்ளது” என தெரிவித்துள்ளார்..