
உலக பணக்காரர்களின் ஒருவரும், பிரபல இந்திய தொழிலதிபரும் ஆன முகேஷ் அம்பானி, நீடா அம்பானிக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளன. இந்நிலையில் முகேஷ் அம்பானியின் கடைசி மகனான ஆனந்த் அம்பானிக்கும், பிரபல தொழிலதிபர் விரேனின் மகள் ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நிச்சயிக்கப்பட்டது. இதில் திருமணத்திற்கு முந்தைய வைபவங்கள் கடந்த மார்ச் மாதம் 3 நாட்கள் அம்பானியின் சொந்த ஊரான குஜராத்தில் நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து இன்று ஆனந்த அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் திருமணம் நடைபெற்றது. மும்பை காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள ஜியோ வேர்ல்டு சென்டரில் நடைப்பெற்றது.
நாளை சனிக்கிழமை அன்று மணமக்களுக்கு விருந்தினர்கள் ஆசீர்வாதம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் திருமண வரவேற்பு நடக்கயிருக்கிறது. இதைத்தொடர்ந்து வருகின்ற 14ஆம் தேதி மங்கள் உச்சவ் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் அமெரிக்க ரியாலிட்டி டிவி நட்சத்திரங்கள் கிம் கர்தாஷியன் மற்றும் அவரது சகோதரி க்ளோ கர்தாஷியன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பெரும் பணக்காரர்கள், வெளிநாட்டு பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர், மு.க.ஸ்டாலின் போன்ற பல அரசியல்வாதிகளும் கலந்துக்கொண்டார்கள். ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களுக்காக 100-க்கும் மேற்பட்ட தனியார் விமானங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான வாடகை செலவு சுமார் 2500 கோடியாகும் என கூறப்படுகிறது.