
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில், ஒரு இந்திய மெக்கானிக், காரில் உள்ள பவர் வின்டோவை இயக்க, வழக்கமான கார் ஸ்விட்சைப் பயன்படுத்தாமல், வீடுகளில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் ஸ்விட்ச் போர்டை பயன்படுத்துகிறார்.
இந்த ‘தேசி ஜுகாட்’ சூப்பராக வேலை செய்கிறது என்பதை வீடியோவில் காண முடிகிறது. இந்த சுவாரஸ்யமான வீடியோவை முதலில் @rareindianclips என்ற பயனர் பகிர்ந்திருந்தார், தற்போது இதற்கு 70,000-க்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன.
— rareindianclips (@rareindianclips) April 15, 2025
இந்த விசித்திரமான கண்டுபிடிப்பு சமூக வலைதள பயனாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “இந்த டெக்னிக் இந்தியாவை விட்டு வெளியே போகக் கூடாது!” என ஒருவர் கமெண்ட் செய்திருக்க, “வாவ்… இது நம்ம ‘அதிவேக’ தொழில்நுட்பம்” என மற்றொருவர் பாராட்டியுள்ளார்.
“ஏற்கனவே நம்ம இந்தியர்களுக்கு எல்லாத்துக்கும் ஜுகாட் இருக்கு… இது அதற்கு அடுத்த எடுத்துக்காட்டு,” என மற்றொரு பயனரும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது ‘சின்னதில் பெரிய சிந்தனை’ என அனைவரையும் பிரமிக்க வைக்கும் வகையில் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.