திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் திருவிழாவுக்கு வந்த மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த இன்ஜினியரான பாண்டிதுரை என்பவர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதார். இதனை கேட்டு சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பாண்டிதுரையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.