
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருமூச்சி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். கடந்த 2018-ஆம் ஆண்டு மோகன்ராஜ் 2-ஆம் வகுப்பு படித்த 8 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் மோகன்ராஜை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் மோகன்ராஜுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.