
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் வெள்ளாளபுரம் பகுதியில் அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு நாகர்கோவிலை சேர்ந்த பிரான்சிஸ் ஆண்டனி(50) என்பவர் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் பிரான்சிஸ் இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் பிரான்சிஸ் ஆண்டனியை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.