ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 14 வயதுடைய சிறுவன் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுவன் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வருமாறு அழைத்துள்ளார். அந்த சரவணன் காரணம் கேட்காமல் வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

பின்னர் அந்த நபர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சிறுவனை அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் சிறுவன் எப்படியோ அங்கிருந்து தப்பித்து வந்து தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை தேடி வருகின்றனர்.