கன்னியாகுமரி மாவட்டத்தில் தம்பதியினர் ஒருவர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர் வீட்டுக்கு அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் யுகேஜி படித்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவ நாளன்று சிறுமி வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது அவர் சோர்வாக இருந்துள்ளார். இதை பார்த்த சிறுமியின் தாயார் அவரிடம் இதைப்பற்றி கேட்டபோது சிறுமி அதிர்ச்சியூட்டும் பதிலை கூறினர்.

அதாவது சிறுமியின் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரியும் ஒருவர் சிறுமியை தனியாக அறைக்கு கூட்டி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

அதன்பின் சிறுமி தனது தாயிடம் அந்தரங்கப் பகுதி வலிப்பதாகவும் கூறியுள்ளார். இதை கேட்ட சிறுமியின் தாயார் அதிர்ச்சியடைந்ததுடன் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தார்.

அங்கு மருத்துவர்கள் சிறுமிக்கு தீவிர சிகிச்சை வழங்கி வருகின்றனர். இதைதொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இச்சம்பவத்தை பற்றி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தனியார் பள்ளி ஓவிய ஆசிரியரை கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.