இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக பாம்புகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருகின்றன. பொதுவாகவே பாம்புகள் என்றால் அனைவருக்கும் பயம் இருக்கும். அதனைப் பார்க்கும் ஆர்வம் மனிதர்கள் மத்தியில் எப்போதும் அதிகமாகவே இருக்கும். பாம்புகள் இணையத்தின் ஹீரோக்கள் என்று சொல்லும் அளவுக்கு இணையத்தில் பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் அதிகளவு வைரலாகி வருகிறது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களின் பட்டியலில் எப்போதும் பாம்புகளுக்கு முக்கிய இடம் உள்ளது. பாம்புகள் பற்றிய திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் என ஏராளமாக காணப்படுகின்றன.

அதன்படி தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் சிறுமி ஒருவர் பாம்பை கயிற்றில் கட்டி தலைகீழாக தொங்க விடுகிறார். கீழே அவரது தந்தை அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்க சிறுமி தன்னுடைய வில்லத்தனத்தை காட்டி தந்தையை பதற வைத்துள்ளார். ஆரம்பத்தில் சரியாக கவனிக்காத தந்தை இறுதியில் பாம்பு என்று தெரிந்ததும் நொடி பொழுதில் உயிர்தப்பினார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.