பிரதமர் நரேந்திர மோடி இன்று அயோத்தி செல்கின்றார். உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் மற்றும் நவீனமயமாக்கப்பட்ட ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மோடி வருகையை முன்னிட்டு நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் நாய் படையினர் தீவிர சோதனை செய்து வருகின்றனர். ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் 1450 கோடியில் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதனை திறந்து வைக்க பிரதமர் மோடி இன்று வருகை தர உள்ளார்.