
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியா போஸ்ட் ஆபீஸ் பெயரில் குறிப்பிட்ட சில செல்போன் எண்களுக்கும், இமெயில் முகவரிக்கும் மோசடி கும்பல் எஸ்எம்எஸ் அனுப்பி வருகின்றது. இது தொடர்பாக வரும் எஸ் எம் எஸ் இல், உங்கள் பார்சல் குடோனுக்கு வந்துவிட்டது. உங்களிடம் டெலிவரி செய்ய இரண்டு முறை முயற்சித்தோம். ஆனால் முகவரி முழுமையாக இல்லாததால் டெலிவரி செய்ய முடியவில்லை. பார்சல் திரும்ப பெறப்படுவதை தவிர்க்க உடனே முகவரியை 48 மணி நேரத்திற்குள் அப்டேட் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக ஒரு லிங்க்கும் கொடுக்கப்படும் நிலையில் அதனை கிளிக் செய்தால் இந்தியா போஸ்ட் இணையதளம் போன்ற ஒரு இணையதளம் ஓபன் ஆகிறது. எந்த ஒரு பொருளும் ஆழ்வார் செய்யாத நபர்களுக்கும் இது போன்ற தகவல் வந்துள்ளது. இதனை ஆராய்ந்து பார்த்த போது இது போலியான தகவல் என்பதும் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி நிதி பாதிப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது எனவும் தெரியவந்துள்ளது. எனவே மக்கள் இது போன்ற போலி செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.