
உத்திரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இந்நிலையில் தற்போது அரசு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது youtube, instagram, எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் அரசு குறித்து ஆதரவாக பதிவிட்டால் அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது அரசின் சாதனைகள், திட்டங்கள் போன்றவைகள் பற்றி சமூக வலைதளம் மூலமாக மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். இது அந்த மாநிலத்திற்கு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கும் பொருந்தும். இந்நிலையில் youtube இல் அரசுக்கு ஆதரவாக சார்டஸ் வீடியோ மற்றும் வீடியோக்கள் போடுபவர்களுக்கு சப்ஸ்க்ரைபர்கள் அடிப்படையில் 4 வகைகளாக பிரித்து ரூ.8 லட்சம், ரூ.7 லட்சம், ரூ.6 லட்சம் மற்றும் ரூ. 4 லட்சம் மாதம் பரிசு தொகை வழங்கப்படும்.
அதன்பிறகு x பக்கத்தில் பதிவிடுபவர்கள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிடுபவர்கள் ஆகியோர்கள் 4 வகைகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ரூ.5 லட்சம், ரூ.4 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். மேலும் உத்திரபிரதேச டிஜிட்டல் மீடியா பாலிசி 2024க்கு தற்போது அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில் தரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.