பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். அதாவது ஊழல் கறை படிந்த, ஒழுங்காக வேலை செய்யாத ஊழியர்களை கண்டறிந்து அவர்களை உடனடியாக டிஸ்மிஸ் செய்து பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அதன் பிறகு ஊழலில் திளைக்கும் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு கொடுப்பதற்கு அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. மேலும் ஒழுங்காக வேலையை உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள். இல்லையெனில் காணாமல் போய்விடுவீர்கள் என்று எச்சரித்தார். மேலும் சரிவர வேலை செய்யாத மற்றும் லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் உடனடியாக பாரபட்சம் இன்றி டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று பிரதமர் மோடி கடுமையாக எச்சரித்துள்ளது அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.