மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு பணியாளர்களை இடமாற்றம் செய்ய தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் நடைபெறும் வழக்கமான இந்த நடைமுறையால் அரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் பல ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிவது தடுக்கப்படும். இது தொடர்பாக தலைமைச் செயலாளருக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார்.