
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஈத்தாமொழி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அமைந்திருக்கும் அரசு தொடக்க பள்ளியின் கட்டிடம் வர்ணம் இழந்து பாசி படர்ந்து காணப்பட்டது. இதனால் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் சிரமம் அடையும் சூழல் ஏற்பட்டது.
இதனையறிந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 20-க்கும் மேற்பட்டோர் தாங்கள் சேமித்து வைத்த 1 லட்சத்திற்கும் மேலான பணத்தை செலவிட்டு அரசு தொடக்க பள்ளியை வர்ணம் அடித்துள்ளனர். இதனை மாவட்ட கண்காணிப்பாளர் பார்வையிட்டு திறந்து வைத்துள்ளார். இளைஞர்களின் இந்த செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.