கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் 11 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி ஒரு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு அதே பள்ளியில் படிக்கும் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஒசூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுவர்கள் மூவரையும் கைது செய்து அரசு கூர்நோக்குப் பள்ளியில் அடைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.