
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ் கே கோட்டா ஏன்டா என்பவர் ஒன்றாம் வகுப்பில் புதிதாக சேரும் ஒவ்வொரு குழந்தைகளின் பெயரிலும் அவர்களுடைய வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்து வருகின்றார். இதனால் அந்த பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் மதிய உணவு மற்றும் பாடப்புத்தகங்கள் என பலவற்றை மாணவர்களுக்கு அவர் இலவசமாக வழங்கி வருவதால் மாணவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகின்றன. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை நம்பி இந்த பள்ளியில் சேர்க்கின்றனர். இவரது புதுமையான செயல்பாடுகளால் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்கள் ஆர்வம் அதிகரித்துள்ளது.