
கோயம்புத்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று ஒரு இளம்பெண் பேருந்தில் சென்றார். இந்த இளம்பெண் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அந்த பேருந்தல் நடத்துனராக மகாலிங்கம் என்பவர் இருந்துள்ளார். இவர் திடீரென அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் உடனடியாக தன்னுடைய உறவினருக்கு செல்போன் மூலம் தகவலை சொன்னார். அந்த தகவலின் படி பெண்ணின் உறவினர்கள் திருநெல்வேலி புது பேருந்து நிலையத்திற்கு வந்தனர். இதைத்தொடர்ந்து நடத்துனரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மகாலிங்கத்தை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.