திருவள்ளூர் மாவட்டம் கே.ஜி கண்டிகை பேருந்து நிலையம் அருகே திருத்தணி நோக்கி ஒரு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தின் மீது எதிரே வந்த டிப்பர் லாரி அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த நபர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் திருவள்ளூரை சேர்ந்த அரசு என்பவர் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அரசு பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பேருந்து விபத்தில் இறந்தவர்களின் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.