
சென்னையில் இருந்து நேற்று இரவு காரைக்கால் பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலை நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதி நின்றது. அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து எதிர்பாராத விதமாக அரசு பேருந்தின் பின்னால் மோதியது.
இது குறித்த தகவலின் பேரில் ரெட்டிசாவடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 29 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.