
மாநில மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மருத்துவ கல்வி இயக்குநர் மூலமாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி சுகாதார மேம்பாட்டுக்கு தமிழ்நாடு அரசு அதிக செலவு செய்யும் நிலையில் விதிகளுக்கு முரணாக மருத்துவர்கள் செயல்படுகின்றனர் எனவும் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. கருப்பையை அகற்றியதாக சுமதி என்ற பெண் அளித்த புகாரின் பேரில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.