
கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் புலம் பெயர்ந்த தொழிலாளியான ராம் சந்தர் என்பவர் வெறிநாய் படியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ரேபிஸ் நோய் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட ராம் சந்தருக்கு தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ராம் சந்தர் திடீரென தனது வார்டில் வைத்து கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் ராம் சந்தரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.